தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஏற்பட்ட கடும் பாதிப்பை கருத்தில் கொண்டு தமிழக முதலமைச்சர் உத்தரவின் பேரில் உள்ளாட்சித் துறை அமைச்சர் கே என் நேரு ஆலோசனையின்படி தூத்துக்குடியில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மேற்பார்வையில் இந்த ஆண்டு மழை வெள்ளத்தில் தூத்துக்குடி மாநகர் மக்கள் எந்த பாதிப்பும் அடையக்கூடாது என்ற எண்ணத்தில் தமிழக முதலமைச்சர் அறிவித்த 2..o. அதனை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் இருபது மணி நேரம் உழைப்பு என்று எடுத்துக்கொண்டு அதற்குத் தகுந்த போல் பணிகளை செய்து வருகிறார்
திங்கட்கிழமை தூத்துக்குடி மாநகர் பகுதியில் மாநகராட்சி சார்பில் உள்ள குளங்கள் முழுவதையும் பார்வையிட முடிவு செய்தார் அதன் அடிப்படையில் மாநகராட்சி கட்டுப்பாட்டில் மீள விட்டான் பகுதியில் உள்ள சி.வ. குளத்தை ஆய்வு செய்ய முடிவு மேற்கொண்டு பார்வையிட சென்றார் 125 ஏக்கர் பரப்பளவில் முழுவதும் முள் செடிகள் நடந்து செல்ல பாதை இல்லை முள் செடிக்குள் நடந்து சென்று 9 ஜேசிபி இயந்திரங்கள் 3 பொக்லைன் இரண்டு ஹிட்டாச்சி வாகனம் மூலம் 125 ஏக்கரில் உள்ள முள் செடிகள் முழுவதும் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது
இந்தப் பணிகள் எல்லாம் மூன்று தினங்களுக்குள் முடிந்து விடும் காற்றாற்று வெள்ளத்தில் வரும் மழைநீர் இந்த சி.வ. குளத்துக்கு வரும் வகையில் பாதைகள் உருவாக்கப்பட்டு கரையை உயர்த்தப்பட்டு பலப்படுத்தப்பட்டுள்ளது அதன் போல மாடன் குளம் சங்கர பேரி குளம் கோக்கூர் குளம் புலிப்பாஞ்சன்குளம் ஆகிய குளங்கள் எல்லாம் தூர்வாரப்பட்டு மாநகருக்குள் மழை நீர் வராத வகையில் சரி செய்யப்பட்டு வருகிறது இதில் வேடிக்கென்னவென்றால் 125 ஏக்கர் கொண்ட சி.வ. குளம் வாகனத்தை விட்டு இறங்கி முழுவதும் சுற்றி பார்த்து அங்கு உள்ள அனைத்து முள் செடிகளும் முழுமையாக அப்புறப்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்
இந்த முள் செடிகள் முழுவதும் அப்புறப்படுத்தப்பட்ட பின்பு மாநகரக்குள் காற்றாற்று வெள்ள நீர் ஊருக்குள் வராத வகையில் பணிகள் நடைபெற்று வருகிறது இந்த குளம் நிரம்பினால் பக்கீல் ஓடை வழியாக கடலுக்கு செல்லும் வகையில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளது மாநகர் மக்கள் எந்த வெள்ளம் வந்தாலும் பாதிக்க கூடாது என்ற எண்ணத்தில் காலை பொழுதில் 125 ஏக்கர் கொண்ட முள் செடிக்குள் பல மணி நேரம் நடந்து சென்று பணிகளை பார்வையிட்டு அதிகாரிகளுக்கு சில கட்டளையிட்டார்
இதனால் மீள விட்டான் பகுதியில் இருந்த பொதுமக்கள் மாநகராட்சி மேயர் ஜெகன் செயலை பார்த்து நேரில் பாராட்டினார்கள் இதோடு முடிக்கவில்லை மாநகராட்சி மேயர் ஜெகன் கதிர்வேல் நகர் வழியாக மீள விட்டான் ரயில்வே தண்டவாளம் குகை வழியாக மடத்துருக்கு செல்லும் பாதையை நேரில் சென்று பார்வையிட்டால் 40 அடி கொண்ட அந்த சாலை தற்போது 14 அடி சாலையாக உடனடியாக அமைக்கப்படுகிறது ரோட்டில் இருபுறமும் உள்ள முள் செடிகள் உடனடியாக அப்புறப்படுத்த மாநகராட்சி மேயர் ஜெகன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்
ஒரு சில தினங்களில் மாநகர மக்கள் சிப்காட் பைபாஸ் சாலைக்கு செல்ல வேண்டுமென்றால் கதிர்வேல் நகர் வழியாக மீள விட்டான் மடத்தூர் வழியாக சிப்காட் பைபாஸ் சாலைக்கு வரும் வகையில் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது இது பொதுமக்கள் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் நகர் பகுதியில் வாகனங்கள் போக்குவரத்து நெரிசல் முற்றிலும் குறையும் என்று தெரிய வருகிறது இது பற்றி மாநகராட்சி மேயர் ஜெகன் கூறுகையில் தமிழக முதலமைச்சர் உத்தரவின் பேரில் 2023 ஆம் ஆண்டு ஏற்பட்ட கடும் வெள்ளத்தை ஒரு பாடமாக ஏற்றுக் கொண்டு வரும் காலத்தில் எவ்வளவு பெரிய காற்றாற்று வெள்ளம் வந்தாலும் மாநகர் மக்கள் பாதிக்காத வகையில் இந்த 125 ஏக்கர் கொண்ட சி.வ. குளம் முள் செடிகள் முழுவதும் அப்புறப்படுத்தப்பட்டு காற்றாற்று வெள்ள நீர் தேக்கி வைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று மாநகராட்சி மேயர் ஜெகன் கூறினார்
முள் செடிக்குள் மேயர் ஜெகன்நடந்து சென்றது உடன் சென்ற அதிகாரிகளே அதிர்ச்சி அடைந்தன இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா மாநகரத் துணைச் செயலாளர் மாமன்ற உறுப்பினர் கீதா முருகேசன் மாநகராட்சி சுகாதார குழு தலைவர் சுரேஷ்குமார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்