கோவை மாவட்டம் பேரூர் தவத்திரு சாந்தலிங்கர் அடிகளார் திருமடத்தில் தவத்திரு ஆறுமுக அடிகளார் குருபூசை விழா மற்றும் தவத்திரு ஆறுமுக அடிகளார் 1906 முதல் 1967 வரை குருபூசை விழா மற்றும் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.இதில் சிறப்பு விருந்தினராக நல்லறம் அறக்கட்டளை தலைவர் அன்பரசன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர் அவருக்கு பொன்னாடை போற்றி கௌரவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் பேரூர் ஆதீனம் 25-ம் பட்டம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் நூலை வெளியிட்டுச் சிறப்புரையாற்றினார்.சிரவை ஆதீனம் நான்காம் பட்டம் இராமானந்த குமரகுருபர சுவாமிகள் நூலைப் பெற்று வாழ்த்துரை வழங்கினார்.