கோவை,
கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் ராம்ராஜ் காட்டன் புதிய ஷோரூம் இன்று திறக்கப்பட்டது. இந்த ஷோரூம் ராம்ராஜ் காட்டனின் 20வது ஷோரூம் ஆகும்.
புதிய ஷோரூமை கல்வியாளர் டாக்டர் கிருஷ்ணராஜ் வானவராயர் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் ராம்ராஜ் காட்டன் நிறுவனர் மற்றும் தலைவர் கே.ஆர். நாகராஜன் மற்றும் நிர்வாக இயக்குனர் பி.ஆர். அருண் ஈஸ்வர், இணை நிர்வாக இயக்குனர் எஸ். அஸ்வின் மற்றும் ஹீரோ பேஷன் நிர்வாக இயக்குனர் சுந்தரமூர்த்தி, முக்கிய பிரபலங்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் என ஏராளமான பேர் கலந்து கொண்டனர். கோவையைச் சேர்ந்த எமரால்டு ஜூவல் இண்டஸ்ட்ரி இந்தியா நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஸ்ரீனிவாசன் ஆடைகளை வாங்கி முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.
புதிதாக திறக்கப்பட்டுள்ள இந்த ஷோரூமில் வெள்ளை வேட்டிகள் சட்டைகள் முதல் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பண்டிகை கால ஆடைகள் மற்றும் பல்வேறு வகையிலான புதிய ஆடை ரகங்கள் வரை ஏராளமாக உள்ளன.
துவக்க விழாவில் ராம்ராஜ் காட்டன் நிறுவனர் மற்றும் தலைவர் கே.ஆர். நாகராஜன் பேசுகையில், கோவையில் எங்கள் 20வது ஷோரூமைத் திறப்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. கோவை எங்களுக்கு எப்போதும் சிறப்பு வாய்ந்த நகரமாகும். மேலும் எங்கள் வாடிக்கையாளர்கள் பல ஆண்டுகளாக எங்களுக்கு அளித்து வரும் ஆதரவிற்கு நாங்கள் உண்மையிலேயே நன்றி உள்ளவர்களாக இருக்கிறோம். அவர்களின் ஊக்கமே எங்கள் பயணத்தின் அடித்தளமாக இருந்து வருகிறது.
இந்த புதிய ஷோரூம் எங்களின் பலவித ஆடை ரகங்களை அவர்களுக்கு இன்னும் நெருக்கமாகக் கொண்டுவருவதற்கான ஒரு வழியாகும். திருமணங்கள், திருவிழாக்கள் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் என அனைத்திற்கும் ஏற்ற ஆடைகள் இங்கு ஏராளமாக உள்ளன. பாரம்பரியத்தை போற்றும் வேட்டி சட்டைகளை பல்வேறு வண்ணங்களில் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என்றார்.
தொடர்ந்து திறப்பு விழாவில் ராம்ராஜ் காட்டன் தலைவர் கே.ஆர். நாகராஜன், சுயம்வர கிராண்ட், பரிணயம் கிராண்ட், சங்கல்பம் கிராண்ட் மற்றும் லக்ஸ் செட் ஆகிய கிராண்ட் கலெக்ஷன்களையும் அறிமுகம் செய்து வைத்தார்.
இந்த நேர்த்தியான வேட்டி-சட்டை செட்கள் ஜாக்கார்டு பார்டர்களுடன் தரமான துணிகளில் தயாரிக்கப்பட்டு உள்ளன. அவை திருமணங்கள், திருவிழாக்கள் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த வேட்டி-சட்டைகள், ஸ்கை ப்ளூ, கோல்ட், மோஸ் கிரீன் மற்றும் ரோஸ் கோல்ட் போன்ற வண்ணங்களில் கிடைக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.