A.ஜான்பீட்டர் செய்தியாளர் நெல்லை
காரையார் அரசு உயர்நிலைப் பள்ளியில் வன உயிரின வார விழா நடைபெற்றது.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் முண்டந்துறை வனச்சரகத்திற்குட்பட்ட காரையார் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட உயர்நிலை பள்ளியில் வைத்து புலிகள் காப்பக துணை இயக்குனர்
L.C.S ஸ்ரீகாந்த் இ.வ.ப உத்தரவின் படி முண்டந்துறை வனசரக அலுவலர் கல்யாணி தலைமையில் வன உயிரின வார விழா கொண்டாடப்பட்டது.
காரையார் அரசு உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவ , மாணவிகள் இடையே வனத்தையும், வன உயிரினங்களைப் பற்றிய தெளிவான தகவல்களை விளக்கிக் கூறும் வகையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ மாணவியர்களுக்கு பொது அறிவு சார்ந்த போட்டி தேர்வுகளும், வினாடி வினா போட்டி, ஓவிய போட்டி போன்ற போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி மாணவ மாணவியர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
வன உயிரின வார விழாவில் பாபநாசம் வாசகர் அலுவலர் குணசீலன் உண்டு உறைவிட உயர்நிலைப் பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் வனப் பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு சுவரில் வரையப்பட்டிருந்த ஓவியத்தின் மீது கையெழுத்து இட்டு கொண்டாடினர்.