வலங்கைமான் அரசினர் பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் தமிழ் மன்ற விழாவில் கவியரங்கு மாணவ, மாணவிகள் பங்கேற்பு.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தொழுவூர் அரசினர் பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் தமிழ் மன்ற விழாவில் கனடாவில் இருந்து வருகை தந்திருந்த கவிதைத் தூவானம் நிறுவனர் அனுஷா செல்வரத்தினம் தலைமையில் நடைபெற்றது. தொழில்நுட்பக் கல்லூரி முதல்வரின் நேர்முக உதவியாளர் இராம.வேல்முருகன் அனைவரையும் வரவேற்று பேசினார்,

கல்லூரி முதல்வர் ஜான் லூயிஸ் வழிநடத்திச் சென்றார். முதலாம் ஆண்டு துறைத் தலைவர் முருகன் முன்னிலை வகித்தார். இலங்கை யாழ்ப்பாணம் தேசிய கல்வியியல் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ஜெயலட்சுமி உதயகுமார் சிறப்புரையாற்றினார்கள், குடந்தை குஞ்சித சுகுமார், கவிஞர் மோகன், கவிஞர் திருமாவளவன், கவிஞர் மதிவாணன், கவிஞர் இளைய தீபன், கவிஞர் மைதிலி தயாளன் உள்ளிட்ட பல கவிஞர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

கல்லூரி மாணவ, மாணவிகள் கவியரங்கத்தில் கலந்து கொண்டார்கள். தமிழ் மன்ற பொறுப்பாளர் மதன் விரிவுரையாளர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். மாணவன் ஆனந்த் சர்மா தவில் வாசித்து விழாவை சிறப்பித்தார், ஆசிரியர் சீத்தாராமன் நன்றியுரை வழங்கினார்கள். விழா பொறுப்பாளர்களாக சுகந்தி தமிழ் ஆசிரியை மற்றும் புவனேஸ்வரி இருவரும் தொகுத்து அளித்தார்கள், விழா முதல்வரின் நேர்முக உதவியாளர் இராம.வேல்முருகன் செய்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *