திருவாரூர் செய்தியாளர்வேலா செந்தில்,

சரியான நேரத்தில் மேட்டூர் அணை திறக்கப்பட்டதால் இந்த ஆண்டு கடந்த 60 ஆண்டைக் காட்டிலும் நெல் உற்பத்தி பல மடங்கு அதிகரித்துள்ளதாக திருவாரூர் அருகே தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண் இயக்குனர் அண்ணாதுரை பேட்டி.

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அண்மையில் தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் டெல்டா மாவட்ட ஆட்சியர்களுடன் விவசாயிகள் கொண்டு வரும் நெல் விரைவாக கொள்முதல் செய்யப்பட்டு விரைவாக ஆலைகளுக்கு அனுப்ப வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார் அதன்படி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண் இயக்குனர் அண்ணாதுரை திருவாரூர் மாவட்டத்தில்பல்வேறு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு செய்தார் குறிப்பாக ஊர்குடி ,திருநெய்பேர், குன்னியூர் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை ஆய்வு செய்தனர் மேலும் வண்டாம்பாளை தற்காலிக சேமிப்பு கிடங்கை பார்வையிட்டு அதன் இருப்பு விவரங்களை கேட்டு அறிந்தனர்.

அதன் பிறகு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகன சந்திரன் மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிய கழக மேலாண் இயக்குனர் அண்ணாதுரை ஆகியோர் செய்தியாளர்களை கூட்டாக சந்தித்தார்கள் அப்பொழுது பேசியதாவது ..
..
தமிழக முதல்வர் இந்த ஆண்டு மேட்டூர் அணையை சரியான நேரத்தில் விவசாயிகளின் நலன் கருதி சிறந்த காரணத்தினால் இந்த ஆண்டு தமிழகத்தில் அதிக பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டு கடந்த 60 ஆண்டு காட்டிலும் பல மடங்கு அதிக அளவில் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது .மேலும் விவசாயிகளின் நலன் கருதி நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் விவசாயிகள் எங்கெங்கு கேட்கிறார்களோ அங்கங்கு திறக்கப்பட்டு வருகிறது தற்பொழுது 350 க்கும் மேற்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.

மேலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மணிகள் தேக்கம் இருக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆகவே அதிக விவசாயிகள் ஒரு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகளை வைத்திருந்தால் அங்கு உடனடியாக மற்றொரு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்படும் விவசாயிகளை காக்க வைக்காமல் விரைவாக நெல் கொள்முதல் செய்வதற்காக நாள் ஒன்றுக்கு ஆயிரம் மூட்டைகள் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது என தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி .கலைவாணன் ,நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் ,தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக பொது மேலாளர் சரவணன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

பேட்டி: மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன்,
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண் இயக்குனர் அண்ணாதுரை .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *