மாநகராட்சி சார்பில் தெருவில் சுற்றி தெரியும் நாய்களை கண்டறிந்து நோய் பரவாமல் தடுக்கும் விதமாக தடுப்பூசி போடுவதற்கு நடவடிக்கை எடுத்த மாநகராட்சி அதிகாரிகள்
திருவொற்றியூர் மண்டலத்தில் தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பு ஊசி செலுத்தும் பணி மாநகராட்சி துணை ஆணையர் தொடங்கி வைத்தார்.
சென்னை மாநகராட்சி 1 வது மண்டலத்திற்கு உட்பட்ட திருவொற்றியூர் தொகுதியில் பொதுமக்கள் அதிகமாக நடமாட்டம் இருக்க கூடிய பகுதிகளில் மற்றும் வடிவுடையம்மன் கோவில் அரசு கலைக் கல்லூரி அருகே சுற்றி திரிந்த தெரு நாய்களால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்களை தொடர்ந்து பிரச்சினை ஏற்பட்டு வருகிறது சென்னை மாநகராட்சி சார்பில் தெரு நாய்களுக்கு வெறி நாய் தடுப் பூசி மற்றும் ஒட்டுண்ணி நீக்க ஊசி மூலம் மருந்து செலுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது
திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி வடிவுடையம்மன் கோவிலுக்கு அருகே சுற்றி திரிந்த தெரு நாய்களை நரிக்குறவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் வலை போட்டு பிடித்து கொண்டு வந்தனர்.
வடக்கு வட்டார துணை ஆணையர் கட்டா ரவி தேஜா தெரு நாய்களுக்கு ரேபிஸ் நோய் தடுப்பூசி மருந்து செலுத்தும் முகாமை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மண்டல குழு தலைவர் தி மு தனியரசு மண்டல அலுவலர் பாண்டியன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். தடுப்பூசி செலுத்தப்பட்ட நாய்களுக்கு அடையாளம் இடப்பட்டது