செங்குன்றம் செய்தியாளர்
தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினர் ” காக்கும் பணி எங்கள் பணி” என்பதை முக்கிய குறிக்கோளாக கொண்டு மக்களுக்கு சேவையாற்றி வருகின்றனர் .
பேரிழவை ஏற்படுத்தும் தீயில் இருந்து உயிர்களையும் , உடைமைகளையும் காப்பதோடு , இயற்கை இடர்பாடுகளான வெள்ளம் ,புயல், நிலச்சரிவுகள் போன்றவைகளில் இருந்தும் , மனிதர்களால் ஏற்படுத்தப்படும் அழிவுகளில் இருந்தும் மக்களை காப்பதும் இத்துறையின் முக்கிய பணியாகும். மனிதர்கள் மற்றும் விலங்குகளையும் பல்வேறு மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு காப்பாற்றுகின்றனர்.
இதனை பொதுமக்களிடம் எடுத்துச் செல்லும் விதத்தில் அவர்களும் தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக “வாங்க கற்றுக்கொள்வோம் ” என்ற இலவச வகுப்புகள் சென்னையில் உள்ள அனைத்து தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையங்களில் பள்ளி, கல்லூரி மாணவ , மாணவிகள், மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் கற்றுவிக்கப்படுகிறது. இந்த வகுப்புகள் நாளையும் , நாளை மறுநாளும் காலை காலை 10 மணி முதல் 11 மணி வரை 12 முதல் ஒரு மணி வரை மாலை 4 மணியிலிருந்து 5 மணி வரை நடைபெறுகிறது.
பொதுமக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ள தீயணைப்பு துறையின் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.