திருச்சி ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ரயிலில் எளிதில் தீப்பற்றக்கூடிய பட்டாசுகளை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை மீறி பட்டாசுகளை எடுத்துச் செல்லும் பயணிகளுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும், மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு பயணிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.
மண்ணை
க. மாரிமுத்து.