கரூர் செய்தியாளர் மரியான்பாபு
கரூர் மாவட்ட பா.ஜ.க சார்பில் திண்ணை பிரச்சாரம் தொடக்கம்..
பாரத பிரதமர் நரேந்திரமோடி,பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் MLA ஆகியோரின் வழிகாட்டியதன் படி தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம் ஆகியவை குறித்த விழிப்புணர்வு திண்ணை பிரச்சாரம் கரூர் மாவட்டம்
கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதிக்குற்பட்ட கடவூர் வடக்கு ஒன்றியத்தில் உள்ள கீரணுர் பஞ்சாயத்து, தேவர் மலை பஞ்சாயத்து ஆகிய பகுதிகளின் பொறுப்பாளர்கள் மற்றும் பொதுமக்களுடன் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பா.ஜ.க கடவூர் வடக்கு ஒன்றிய தலைவர் ஸ்ரீவிகான் ரமேஷ் தலைமை தாங்கினார்.பா.ஜ.க கரூர் மாவட்ட தலைவர் V.V.செந்தில்நாதன் அறிவுறுத்தல்படி
சிறப்பு அழைப்பாளராக மாவட்ட துணை தலைவர் ஆறுமுகம்,கரூர் மாவட்ட செயலாளர் காவேரி மோகன்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பொறுப்பாளர்கள், பொதுமக்களுடன் திண்ணை பிரச்சாரம் செய்து தொடங்கி வைத்தனர்,பாரதிய ஜனதா கட்சியின் மிலிட்டரி செந்தில்,வின்செண்ட்,அண்ணாத்துரை,ராமசாமி, ஜோதிமணி,சுப்ரமணி, செந்தில்வேலன்,காளிதாஸ்,ரமேஷ் மற்றும் கார்யகர்த்தாக்கள்,நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.