சென்னை மாநகராட்சி சார்பில் நிலத்தடி நீரை பாதுகாக்க , தி.மு.தனியரசு தலைமையில் கே. பி. சங்கர் எம். எல் .ஏ திருவொற்றியூர் துறைமுகத்தில் பனை விதை விதைத்தனர்.
பாரம்பரிய நீர் ஆதாரங்களை மீட்டெடுக்கும் வகையிலும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கிலும் பசுமைப் பரப்பை அதிகரிக்கும் விதமாக சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்வாக பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் ஒன்றரை லட்சம் பனை விதைகள் நடும் திட்டத்தின் கீழ் பெருநகர சென்னை மாநகராட்சியின் முதல் மண்டலமான திருவொற்றியூர் மண்டலத்திற்கு உட்பட்ட திருவொற்றியூர் சூரை மீன்பிடி துறைமுகம் சத்தியமூர்த்தி நகர் தாழங்குப்பம் மற்றும் 3வது வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் ஐந்தாயிரம் பனை விதை நடும் நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது.
நிகழ்ச்சியின் துவக்கமாக திருவொற்றியூர் சூரை மீன்பிடி துறைமுகத்தில் மாநகராட்சி உதவி ஆணையர் பொறுப்பாளர். பாண்டியன், அதிகாரிகள் பாபு, நக்கீரன். முன்னிலையில் திருவொற்றியூர் மண்டல குழு தலைவர் மற்றும் திருவொற்றியூர் கிழக்குப் பகுதி திமுக செயலாளர் திமு.தனியரசு தலைமையில் திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினரும் மாநில மீனவர் அணி துணைத் தலைவர் கே பி சங்கர் பன விதைகளை நட்டு துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் வட்ட திமுக செயலாளர் எம் எல் சரவணன் மாநகராட்சி அதிகாரிகள் தனசேகர் பொன்னுரங்கம் திருவொற்றியூர் அரசு கலைக்கல்லூரி மாணவ மாணவியர்கள். தூய்மை பணியாளர்கள் பலர் கலந்த கொண்டனர்.