அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த குண்டவெளி ஊராட்சியில் 15-வது நிதிக்குழு மானியத் திட்டத்தின் கீழ் ரூ.150 லட்சம் மதிப்பீட்டில் உருவாகியுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் புதிய கட்டிடத்தினை சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் அவர்கள் அடிக்கல் நாட்டி பணியினை துவக்கி வைத்தார்.

அதேபோல, மீன்சுருட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கான தளவாடச் சாமான்கள் ரூ.3 லட்சம் மதிப்பீட்டில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் 2025–2026ன் கீழ் வழங்கப்பட்டு, மாணவர்களின் பயன்பாட்டிற்கு MLA அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில், வட்டார வளர்ச்சி அலுவலர் கஸ்தூரி (வ.ஊ), ஜெயங்கொண்டம் மத்திய ஒன்றிய கழகப் பொறுப்பாளர் மணிமாறன், மாவட்ட பொருளாளர் கு. ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் சி.ஆர்.எம். பொய்யாமொழி, மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் எம்.ஜி. ராஜேந்திரன், மாவட்ட இலக்கிய அணி தலைவர் ஆர். வீராசாமி, அரசு அலுவலர்கள், இருபால ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், கழகத் தோழர்கள் எனப் பலரும் பெருமளவில் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் போது, MLA கண்ணன் அவர்கள் பொதுமக்களிடம் உரையாற்றி, “மருத்துவ சேவைகள் மற்றும் கல்வி வசதிகளை மேம்படுத்துவது தான் எங்கள் முக்கிய குறிக்கோள். இதன் மூலம் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இருவருக்கும் நன்மை கிடைக்கும்” எனத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *