தேனி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகைச முன்னிட்டு பட்டாசு கடை உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து மாவட்ட கலெக்டர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு கடை உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தலைமையில் நடைபெற்றது

பட்டாசு கடை உரிமையாளர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து மாவட்ட கலெக்டர் பேசியது பட்டாசு கடைகள் உரிமம் பெற்ற வளாகத்திலேயே செயல்படுவதையும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதையும் உறுதி செய்ய வேண்டும் அனுமதிக்கப்பட்ட எடை அளவிற்கு முகாமல் சேமிப்பு வைத்திருக்கவும் பட்டாசு பண்டல்களை இறக்கும் போதும் ஏற்றும்போதும் கவனமாக கையாள வேண்டும் பட்டாசுகளின் ஆபத்தான தந்தை குறித்து விற்பனையாளர்கள் மற்றும் பணியாட்களுக்கு தெரியப்படுத்தப்பட்டு பட்டாசு பாக்கெட்டுகள் மற்றும் பெட்டிகளைக் கையாள்வது குறித்த பயிற்சி வழங்கப்பட்டிருக்க வேண்டும். பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் அதிக ஒலி ஒளி புகை இருக்கும் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது பள்ளிகள் நீதிமன்றங்கள் புனித தளங்கள் அமைந்துள்ள பகுதியில் பட்டாசு வெடிக்கக் கூடாது பட்டாசு வெடிப்பதற்கு நன்றாக அருகில் பாத்திரங்களில் தண்ணீர் மணல் ஆகியவற்றைத் தயாராக வைத்திருக்க வேண்டும் பெரியவர்கள் துணையுடனேயே சிறுவர் சிறுமியர் பட்டாசு வெடிக்க வேண்டும் குடிசைகள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களின் அருகே பட்டாசு வெடிக்கக் கூடாது திறந்தவெளியில் பட்டாசு வெடிக்க வேண்டும் ஆகவே பொதுமக்கள் சுற்றுச்சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை அரசு அனுமிதித்துள்ள நேரத்தில் உரிய இடங்களில் பட்டாசுகளை வெடித்து தீபாவளியை கொண்டாடுமாறு மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் பேசினார்

இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜ. மகாலட்சுமி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் முத்து மாதவன் பொது துணை இயக்குனர் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் பிரேம்குமார் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை அலுவலர் ஜெகதீஷ் உதவித் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை அலுவலர் குமரேசன் மற்றும் அலுவலர்கள் பட்டாசு கடை உரிமையாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *