திருவாரூர் மாவட்டம் குடவாசலில் திருவாரூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில்
மாவட்ட செயலாளர் வேணு. பாஸ்கரன் தலைமை வகித்தார்,
மாவட்ட தலைவர் பழனி, உழவர் பேரியக்க மாவட்ட செயலாளர் உலகநாதன், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் கணேச.சண்முகம், உழவர் பேரியக்க மாவட்ட தலைவர் ராஜா, ஆகியோர் முன்னிலை வகித்தனர், முன்னதாக சமூக ஊடக பேரவை மாவட்ட செயலாளர் அருண் அனைவரையும் வரவேற்று பேசினார்,
கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரும், தலைவருமான சமூக நீதி காவலர் மருத்துவர் ச.இராமதாஸ் அவர்கள் திருவாரூர் மாவட்டத்தில் 10 கிராமங்களில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக வருகை தந்து மக்களை நேரில் சந்திக்கிறார், அதுசமயம் உறுப்பினர் சேர்க்கை, பூத் கமிட்டி அமைப்பது, அனைத்து கிராமங்களிலும் சொந்த இடங்களில் கொடி ஏற்றுவது நடைபெற உள்ளது,
இதற்கு அனைத்து பொறுப்பாளர்களும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது என மாவட்ட செயலாளர் வேணு. பாஸ்கரன் பேசினார். நிகழ்வில் திருவாரூர், கொராடச்சேரி, நன்னிலம், குடவாசல், வலங்கைமான் பகுதிகளில் உள்ள மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, ஊரகப்பகுதியில் உள்ள கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் 01.விவசாயத்திற்கு தேவையான உரங்கள் வாங்கும் போது அதனுடன் மற்ற துணைப்பொருட்கள் வாங்க வேண்டும் என கட்டாயப்படுத்துப் படுகிறது, அதனைத் தடுக்க உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- குடவாசலில் இயங்கும் நெல் இருப்புக் கிடங்கை சுற்றியுள்ள சாலைகளை உடனடியாக சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- குடவாசல் வட்டத்தில் எண்கண்- பூங்காவூர் சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது, அதனால் பள்ளி, கல்லூரிகள், மருத்துவமனை செல்லுவோர்களுக்கு மிகவும் சிரமமாக உள்ளது, ஆகையால் அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து சீரமைத்து தர வேண்டும்
- கொராடாச்சேரி கடைவீதியில் இரண்டு டாஸ்மாக் கடைகள் உள்ளது. இதனால் மாலை வேளையில் பொதுமக்களும், பெண்களும் நடமாட முடியாத நிலை உள்ளது. எனவே உடனடியாக அந்த இரண்டு கடைகளையும் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்ட முடிவில் குடவாசல் நகரச் செயலாளர் இளங்கோவன் அனைவருக்கும் நன்றி கூறினார்.