அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது:
அரியலூரில் நடந்தது அரியலூர் நகரம் மேற்கு பகுதியில் 250 ஆண்டுகளுக்கு மேலாக அருள்பாலித்து வரும் பார்வதி தேவியின் ஒரு சக்தி அவதாரம் படைபத்துமாரியம்மன்சுவாமிக்கு கடந்த மாதம் திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேக விழா சிறப்பாக நடந்தது அதனை தொடர்ந்து வழக்கறிஞர் அரியலூர் கோகுல்பாபு பாண்டுரங்கன் குடும்பத்தினரால் மண்டல பூஜை சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு கோவிலில் மாரியம்மன் விநாயகர் முருகன் சிவன் ராமர் லட்சுமணன் சீதை வராகி பைரவர் துர்க்கை நவக்கிரகம் என அனைத்து சாமிகளுக்கும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சுவாமிகள் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது
இந்த பூஜையில் படை பத்து மாரியம்மன் கோவில் நிர்வாகத் தலைவர் வெங்கடேசன் செயலாளர் ஜி டி ஆர் டில்லி ராஜ் பொருளாளர் நடேசன் சண்முகம் ஜுவல்ஸ் கணேசன் பாஜக முன்னாள் மாவட்ட தலைவர் ஐயப்பன் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர் பூஜையில் கலந்து கொண்ட அனைவரையும் வரவேற்று சால்வை அணிவித்து துணைத் தலைவர் அரியலூர் வழக்கறிஞர் கோகுல் பாபு நன்றி கூறி பிரசாதங்கள் வழங்கினார்