தஞ்சைத் தமிழ் மன்றத்தின் கவியரங்கப் பேரவை நடத்திய திங்கள் கவியரங்கம் திருவிடைமருதூரில் நடைபெற்றது.
தஞ்சைத் தமிழ் மன்றத்தின் கவியரங்கப் பேரவை நடத்திய திங்கள் கவியரங்கம் திருவிடைமருதூர் தி.ஆ.அ.தே நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது. முன்னதாக நடுநிலைப் பள்ளி மாணவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தினார்கள்,கவிதை,பாட்டு, பேச்சு என மூன்றிலும் அசத்தினார்கள். ஆதீன நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ம.இரமேஷ்குமார் அனைவரையும் வரவேற்று பேசினார், ரெட்கிராஸ் வி.எம்.பாஸ்கரன் மற்றும் வீனஸ் மழலையர் பள்ளி தாளாளர் விஜயலெட்சுமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். தொடர்ந்து கவியரங்கம் நடைபெற்றது, இந்நிகழ்வில் கவிஞர் குஞ்சித சுகுமார் நடுவராக தனது பணியைத் தொடர்ந்தார்கள்.
தமிழே விதை தமிழை விதை என்ற தலைப்பில் கவிஞர் சிவகிருஷ்ணன், கவிஞர் இளைய தீபன், கவிஞர் மதிவாணன், கவிஞர் ப. மகாலிங்கம், கவிஞர் சோ.மோகன், கவிஞர் தி.செந்தில்குமார், கவிஞர் கு. செல்லதுரை, கவிஞர் பால. சந்திரமதி, கவிஞர் செ.சாவித்திரி, மருத்துவர் ரா.அபிநிவேஷ், கவிஞர் திருத்துறைப்பூண்டி பெ.கோமதிராஜ்குமார் உள்ளிட்டோர் கவிதை வழங்கினர். இறுதியாக கவிஞர் ச.மதிவாணன் நன்றியுரை ஆற்றினார்.
நிகழ்வுக்கான ஏற்பாடுகளை தஞ்சைத் தமிழ் மன்றத் துணைச் செயலாளர் இளைய தீபன், மகாலிங்கம் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.