விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலத்தில் உள்ள சுற்று வட்டார கிராமங்களுக்கு தீயணைப்பு நிலையம் வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று கண்டமங்கலத்தில் புதிய தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய சேர்மன் வாசன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன் கலந்து கொண்டு தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் புஷ்பராஜ், ஒன்றிய துணை பெருந்தலைவர் நஜுராபேகம் தமின், மாவட்ட கவுன்சிலர் பனிமொழி செல்வரங்கம், மாவட்ட வருவாய் அலுவலர் ஹரிதாஸ், விழுப்புரம் தீயணைப்பு நிலைய மாவட்ட மண்டல துணை இயக்குனர் தென்னரசு, மாவட்ட அலுவலர் பாஸ்கரன், மாவட்ட உதவி அலுவலர் ஜமுனா ராணி, சிறப்பு நிலைய அலுவலர் சிவகுமார், ஊராட்சி மன்ற தலைவர் பிரியதர்ஷினி முருகன், தனம் அருளரசன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பத்மாவதி சுந்தரமூர்த்தி மற்றும் அரசு அதிகாரிகள் திமுக கட்சி பிரமுகர்கள் திரளாக கலந்து கொண்டனர். மேலும் கண்டமங்கலம் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டால் அவசர தேவைக்கு 0413 -2225101 என்ற எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என தீயணைப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.