துணைமுதல்வர் உதயநிதியை சந்தித்து வாழ்த்து பெற்றால் மேலும் உற்ச்சாகமாக இருக்கும் என வெற்றிபெற்ற வீரர்கள் பேட்டி:-

உஸ்பெகிஸ்தான் கிக் பாக்சிங் சங்கம் மற்றும் வாக்கோ உலக கிக் பாக்சிங் கூட்டமைப்பு சார்பில், உலக கோப்பைக்கான கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டி, உஸ்பெகிஸ்தான் நாட்டில் உள்ள தாஷ்கண்ட் நகரில் அக்டோபர் 7ந் தேதி துவங்கி நடைபெற்றது,

இதில் சப் – ஜூனியர், ஜூனியர், சீனியர் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன.

இந்தியா உட்பட 40 நாடுகளைச் சேர்ந்த 2,900 வீரர்கள் பங்கேற்றனர் இப்போட்டியில் இந்தியாவுக்காக விளையாடிய தமிழகத்தை சேர்ந்த வீரர்கள் 5 தங்கம் மற்றும் 2 வெண்கலப் பதக்கங்களை வென்ற நிலையில் இன்று சென்னை விமானத்தில் வந்தனர்,

அவர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் உறவினர்கள் விளையாட்டு ஆர்வலர் உற்சாக வரவேற்பு அளித்தனர்,அப்போது செய்தியாளர்களிடம் பேசிய இந்திய பயிற்சியாளர் சுரேஷ்பாபு:- சர்வதேச போட்டியிப் பங்கேற்று இந்திய ஒட்டுமொத்தமாக அறாவது இடம் பிடித்துள்ளது தமிழக வீரர்கள் விளையாடி 5 தங்கம், 2 வெண்கலப்பதக்ங்களை பெற்றுள்ளனர்

அதனை தொடர்ந்து விளையாட்டு வீராங்களை ரக்‌ஷத்திரா, வீரர் சுரேஷ் ரெஸ்வின் ஆகியோர் பேசும்போது:- தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உதவியால் அதிக அளவு வெளிநாட்டு போட்டிகளில் பங்கு பெரும் வாய்ப்பு பெற்றோம் அதன் பயிற்சியால் தற்போது நாட்டுகாக பதக்கம் வென்றோம், போட்டிகள் கடுமையாக இருந்தாலும் எதிர் எதிர் நபர்களுடன் மோதினோம், தற்போது நாங்கள் பதக்கம் கோப்பைகளுடன் வந்துள்ளோம் இதனை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கரங்களால் பெற விரும்புகிறோம் என்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *