தூத்துக்குடி மாநகரப் பகுதியில் நேற்று இரவு மழை பெய்துவிட்ட நிலையில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது.
இதனை அடுத்து தூத்துக்குடி மாநகரில் மழை நீர் எங்கேயாவது தேங்கி உள்ளதா? கழிவுநீர் கான்களில் மழைநீர் சீராக செல்கிறதா என்பதை கண்காணிக்க மாநகராட்சி மேயர் ஜெகன் கொட்டும் மலையில் வலம் வந்தார்.
முதலில் ஸ்டேட் பேங்க் காலனியில் புதியதாக கட்டப்படுகின்ற கழிவுநீர் கானை பார்வையிட்டு அதன் அருகில் மழைநீர் செல்லக்கூடிய கழிவுநீர் கானில் மழை நீர் எப்படி செல்கிறது என்பதை பார்வையிட்டார்.
அதன் பின்பு பழைய மாநகராட்சி அலுவலகம் பின்பு உள்ள கழிவுநீர் கான்களை பார்வையிட்டார். பிறகு சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு கொட்டும் மழையில் நடந்தே சென்று கழிவுநீர் செல்லக்கூடிய கான்களை பார்வையிட்டார்.
ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் காண்களைப் பார்வையிடும்போது மழைநீர் செல்லக்கூடிய தண்ணீர் சரியாக செல்கிறதா? மணல் ஏதும் தேங்கி உள்ளதா என்பதை பார்ப்பதற்காக, அருகில் கிடந்த ஒரு கம்பை எடுத்து கழிவுநீர் செல்லக்கூடிய கானுக்குள் தண்ணீர் செல்லும் வேகம் மற்றும் மணல் உள்ளதா என்று மாநகராட்சி மேயர் ஜெகன் பார்த்தார்.
அப்போது மணல் உள்ளதாக தெரிந்ததை அடுத்து அருகில் இருந்த மாநகராட்சி சுகாதார அதிகாரியிடம் உள்ளே தேங்கியுள்ள மணலை அப்புறப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.
அதன் பின்பு கழிவுநீர் செல்லக்கூடிய கான் மீது நடந்து வந்து ஒவ்வொரு பொந்தாக கழிநீர் செல்லக்கூடிய பகுதியை பார்வையிட்டு வந்தார்.
பிறகு ரயில்வே ஸ்டேஷன் அருகில் உள்ள பிள்ளையார் கோவில் முன்பு கழிவுநீர் செல்லும் வேகம் குறைந்தையடுத்து கழிவுநீர் கானில் குனிந்து அடைப்பு உள்ளதா? ஏன் தண்ணீர் அளவு குறைவாக வருகிறது என்று மாநகராட்சி மேயர் ஜெகன் பார்வையிட்டார்.
அதன் பின்பு இந்திரா காந்தி சிலை அருகே நடந்து வந்து கழிவுநீர் செல்லக்கூடிய காண்களைப் பார்வையிட்டு அடைப்புகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று மாநகராட்சி மேயர் ஜெகன் உத்தரவிட்டார்.
பிறகு சந்தை ரோடு பகுதிக்கு வந்த மாநகராட்சி மேயர் ஜெகன் அங்கு நடைபெற்று வரும் கழிவுநீர் செல்லக்கூடிய கான் பணிகளை பார்வையிட்டார்.
ஏற்கனவே உள்ள கழிவு நீர் செல்லக்கூடிய கான்களை மாநகராட்சி மேயர் ஜெகன் பார்வையிட்டார். கொட்டும் மழையில் 2 கிலோ மீட்டர் நடந்தே சென்று மழைநீர் செல்லக்கூடிய பகுதிகளை மாநகராட்சி மேயர் ஜெகன் பார்வையிட்டார்.
இதில் வேடிக்கை என்னவென்றால் கழிவுநீர் செல்லக்கூடிய கான்களில் கம்பு வைத்து குனிந்து பார்வையிட்டதை கவனித்த பொதுமக்கள் ஆச்சரியம் அடைந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி சுகாதாரக் குழு தலைவர் சுரேஷ்குமார், திமுக வட்டச் செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், போல் பேட்டை பகுதி திமுக பிரமுகர் பிரபாகர் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.