இராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் உள்ள தீயணைப்பு நிலையத்தில் “வாங்க கற்றுக் கொள்வோம்” என்ற தலைப்பில் இளைஞர்களுக்கு விழிப்புணர்வு வகுப்பு
இரண்டு நாள்கள் நடைபெற்றது.
கமுதி தீயணைப்பு மீட்பு பணிகள் நிலையத்தில் நிலைய அலுவலர் நாகநாதன் தலைமையில், இளைஞர்களுக்கு தீ பாதுகாப்பு குறித்த “வாங்க கற்றுக்கொள்வோம்’ என்ற தலைப்பில் விழிப்புணர்வு பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
இதில் விபத்து காலங்களில் தீயிலிருந்து உயிர்களையும், உடைமைகளையும் காப்பது. இயற்கை பேரிடர்களான வெள்ளம், புயல், நிலச்சரிவுகள் ஆகியவற்றிலிருந்தும், மனிதர்களால் ஏற்படுத்தப்படும் அழிவுகளில் இருந்தும் மக்களை எவ்வாறு காப்பது என இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, வகுப்புகள் எடுக்கப்பட்டது.
இந்த விழிப்புணர்வு வகுப்புகள் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்றது. ஒரு நாளைக்கு மூன்று பிரிவுகளாக நடத்தப்பட்டது இதில் கமுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டனர்