தமிழக சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ இனிகோ இருதயராஜ், திருச்சியின் மையப்பகுதியான பாலக்கரையில் உள்ள மகளிருக்கான மத்திய சிறைச்சாலையை மாநகருக்கு வெளியே இடமாற்றம் செய்து, அந்தப் பகுதியை காந்தி மார்க்கெட்டை விரிவாக்கம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர் ரகுபதி, சிறைச்சாலையை வேறு இடத்துக்கு கொண்டு செல்ல இடம் தேர்வு செய்யப்பட்டு வருவதாகவும், இடம் கிடைத்தவுடன் மாற்றி கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்
தெரிவித்தார்.
மண்ணை
க. மாரிமுத்து.