தூத்துக்குடி மாநகரில் புதன்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை காலை வரை தொடர்ந்து மழை பெய்து வந்தது. அதன் அடிப்படையில் மாநகரில் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கி இருந்தது பழைய மாநகராட்சி அலுவலகம் ரயில்வே ஸ்டேஷன் ரோடு குருஸ் பர்னாந்து சிலை அருகே உள்ளிட்ட பல பகுதிகளில் மழைநீர் தேங்கி இருந்தது

இதனை அடுத்து மாநகராட்சி மேயர் ஜெகன் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா மற்றும் அதிகாரிகளுடன் அதிகாலை 5 மணி முதல் ஒவ்வொரு பகுதியாக நேரில் சென்று பார்வையிட்டு வந்தனர் அதன் பின்பு பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் வைத்து மாநகராட்சி மேயர் ஜெகன் செய்தியாளர்களிடம் கூறுகையில் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நேற்று மழை பெய்துள்ளது

உலக முதலமைச்சர் உத்தரவின் பெயரில் மாநகரில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது இது பழைய மாநகராட்சி இது கடைசி பகுதி இங்கு எப்போதும் மழை நீர் தேங்கி இருக்கும் இன்று அது எதுவும் கிடையாது மழை நின்றவுடன் மழை நீர் அவ்வளவும் சென்று விட்டது ஏழு சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது பத்து நாள் ஆனாலும் மழை நீர் தேங்கி நிற்கும் ஆனால் மாநகராட்சி எடுத்த நடவடிக்கையால் இரண்டு மணி நேரத்தில் தண்ணீர் வடிந்து விட்டது

மாநகர மக்கள் எங்கு வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ளலாம் மழைநீர் தேங்கி இல்லை கழிவுநீர் கான்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை சரி செய்யப்பட்டு வருகிறது நான்கு மண்டலத்திலும் அஞ்சு வார்டுக்கு ஒரு டிவிஷன் பிரிக்கப்பட்டுள்ளது அங்கு அதிகாரிகள் உள்ளனர். மூன்று வார்டுகளுக்கு ஒரு சுகாதார அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளது

மழை நீர் தேங்கியுள்ள பகுதியில் லாரி மூலம் மழை நீர் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது 24 மணி நேரமும் அதிகாரிகள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர் பி என் டி காலனி பல மாதங்களாக மழை நீர் தேங்கி இருக்கும் தற்போது பாதாள சாக்கடை பணிகள் நடைபெறுவதால் ஒரு சில இடங்களில் மட்டும் மழை நீர் தேங்கியுள்ளது ஒரு மணி நேரத்தில் அங்கும் தண்ணீர் இல்லாமல் சரி செய்யப்படும் பி எம் சி பள்ளி முன்பு உள்ள சாலை கடந்த முறை மழை நீரில் தத்தளித்தது

இந்த முறை அங்கு எதுவும் தண்ணீர் இல்லை அதிக மழை பெய்தால் ஒரு மணி நேரம் இரண்டு மணி நேரம் கூடுதலாக எடுக்கப்படும் தண்ணீர் அவளும் சரி செய்யப்பட்டு விடும் தமிழக முதலமைச்சர் தலைமையில் ஆட்சி அமைந்த உடன் தூத்துக்குடி மாநகரில் தண்ணீர் அப்புறப்படுத்துவது பெரும் சவாலாகவே இருந்தது நாடாளுமன்ற உறுப்பினர் அமைச்சர் ஆகியோர் உத்தரவின் பெயரில் பணிகள் மேற்கொள்ளப்பட்டது

10 வருட அதிமுக ஆட்சியில் எதுவும் செய்யவில்லை மழை பெய்தால் 45 நாள் தண்ணீர் தேங்கி இருக்கும் முத்தம்மாள் காலனி ரஹ்மத்து நகர் மடத்தூர் தனசேகர் நகர் ஆகிய பகுதிகளில் 30 வருடமாக தண்ணீரில் தத்தளித்தார்கள் தற்போது எங்கும் மழைநீர் இல்லை எந்த இடத்திலும் தண்ணீர் கட்டாத மக்கள் பயமில்லாமல் இருக்கலாம் 20 சென்டிமீட்டர் வரை மழை பெய்தாலும் தண்ணீர் தேங்காது கூடுதல் சில மணி நேரங்கள் ஆகுமே தவிர எங்கும் மழைநீர் தேங்கி இருக்காது நகர ஆரம்ப சுகாதார நிலையம் 12 உள்ளது அங்கு டாக்டர்கள் பணியில் உள்ளனர் நாளை முதல் மருத்துவ முகாம் நடைபெற உள்ளது என்று மாநகராட்சி மேயர் ஜெகன் கூறினார் உடன் ஆணையர் பிரியங்கா மாநகராட்சி சுகாதாரக் குழு தலைவர் சுரேஷ்குமார் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *