அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 54வது ஆண்டு துவக்கவிழா அக்டோபர் 17ம் தேதி தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.
அதிமுக பொதுச் செயலளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி அவர்களின் ஆணைக்கிணங்க தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் தூத்துக்குடி பழைய மாநகராட்சி வளாகத்தில் அமைந்துள்ள புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் திருஉருவ சிலைக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் அதனைத்தொடர்ந்து பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினர்.
இந்நிகழ்வில் அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் ஆறுமுகநயினார், மாநில அமைப்புசாரா ஓட்டுனர் அணி இணைச் செயலாளர் பெருமாள் சாமி, மாநில வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் மைக்கல் ஸ்டேனிஸ் பிரபு, முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவரும் மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர் அணி செயலாளருமான சுதாகர், ஒன்றியக் கழக செயலாளர் காசிராஜன், பகுதி கழக செயலாளர்கள் சேவியர், முருகன், ஜெய்கணேஷ், ஆழ்வார்திருநகரி பேரூராட்சி கழக செயலாளர் செந்தில் ராஜகுமார், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் எம்.பெருமாள், பில்லா விக்னேஷ், நடராஜன், டேக் ராஜா, கே.ஜெ.பிரபாகர், ஜெ.ஜெ.தனராஜ், மாவட்ட அண்ணா ஆட்டோ தொழிற்சங்க செயலாளர் நிலா சந்திரன், முன்னாள் மாவட்ட அரசு வழக்கறிஞர்கள் சுகந்தன்ஆதித்தன், ஆண்ட்ருமணி, வழக்கறிஞர்கள் சரவணபெருமாள், முனியசாமி, சிவசங்கர், ராஜ்குமார், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர்கள் சத்யா லெட்சுமணன், நவ்சாத், துணை செயலாளர்கள் மிக்கேல், ஜோதிடர் ரமேஷ்கிருஷ்ணன், அண்ணா தொழிற்சங்க மண்டல செயலாளர் கல்விக்குமார், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் மனுவேல் மற்றும் மகளிர் அணியினர் பெண் பெருந்தலாக கலந்து கொண்டனர்