திருவொற்றியூர் மண்டல குழு கூட்டம், திருவொற்றியூர் தி.மு.க., மண்டல குழு தலைவர் தனியரசு தலைமையில் நடந்தது. இதில், பொறுப்பு உதவி கமிஷனர் பாண்டியன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில், ஜான்ரவர் தெருவிற்கு முன்னாள் தி.மு.க., நகராட்சி துணைத் தலைவர் வீராசாமி பெயரும் ; பாலகிருஷ்ணா நகர், 3 வது தெருவிற்கு, முன்னாள் நகராட்சி தலைவர் விஸ்வநாதன் பெயரும் சூட்டுவது உள்ளிட்ட 37 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. __
தனியரசு தி.மு.க., மண்டல குழு தலைவர்
மழைக்காலத்தில், கவுன்சிலர்கள் போன் செய்தால் மின்வாரிய அதிகாரிகள் நிச்சயம் போன் எடுக்க வேண்டும். சி.பி.சி.எல்., நிறுவனத்தில் வெளியேறிய எண்ணெய் கழிவு பிரச்சனையால், 2023 ல் திருவொற்றியூர் மக்கள் பாதிக்கப்பட்டனர். இம்முறை அந்த பாதிப்பு ஏற்படாத வகையில், மண்டல குழு தலைவர், உதவி கமிஷனர் தலைமையில் கவுன்சிலர்கள் அடங்கிய குழு சி.பி.சி.எல்., நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விரைவில் ஆய்வு செய்வர்.
நாளொன்றுக்கு, 13 எம்.எல்.டி., குடிநீர் கிடைத்தும், விநியோகத்தில் ஏன் தொய்வு ஏற்படுகிறது. குடிநீர் வாரிய அதிகாரிகள் அதை சரி செய்து கொள்ள வேண்டும். தூய்மை பணி மேற்கொள்ளும் தனியார் ஒப்பந்த நிறுவனம், பத்து தெருக்களை ஒரு ஊழியர் எப்படி தூய்மை செய்ய முடியும். ஒரு ஊழியர் விடுமுறையில் இருக்கும் போது, மற்றொரு ஊழியரை அந்த தெரு பணியமடுத்த மீண்டும். இல்லாவிட்டால் குப்பை குவிகிறது. தூய்மை பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.