இராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே செங்கப்படை பகுதியில்
உள்ள அதானி குழுமத்தின் சூரிய ஒளி மின்சக்தி தயாரிக்கும் நிறுவனம் உள்ளது.
இந்த நிறுவனம் சார்பில், சோலார் நிறுவனம் உள்ள பகுதிகளான புதுக்கோட்டை, செங்கப்படை, ஊ.கரிசல்குளம், பாம்புல் நாயக்கன்பட்டி, தோப்படை பட்டி, செந்தனேந்தல், சீமானேந்தல் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 890 விவசாயிகளுக்கு மகசூல் அதிகம் தரும் பருத்தி விதைகள் மற்றும் 310 விவசாயிகளுக்கு நெல் விதைகள் நேற்று இலவசமாக வழங்கப்பட்டது.
இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில், செய்முறை விளக்கம் மற்றும் பயன்கள் பற்றிய கையேடுகள் வழங்கப்பட்டன.அதானி சோலார் தலைமை அதிகாரி வினோத், அதானி சோலார் நிறுவன மேலாளர் மணிவண்ணன், அதானி சோலார் நிறுவன துணை மேலாளர் பிரபாகரன் உள்ளிட்டோர் விவசாயிகளுக்கு பருத்தி மற்றும் நெல் விதைகளை வழங்கினர்.இந்த விழாவில் புதுக்கோட்டை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வீரபாண்டி, கிராம நிர்வாக அலுவலர் பாண்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.