திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கடைவீதியில் ஒன்றிய, நகர அதிமுக சார்பில் கழகத்தின் 54- வது ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது.
நிகழ்வில் வலங்கைமான் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளரும், முன்னாள் ஒன்றியக்குழு தலைவருமான குமாரமங்கலம் கே. சங்கர், கிழக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் யூ.இளவரசன், நகர செயலாளர் சா.குணசேகரன், பொதுக்குழு உறுப்பினர் ஆலங்குடி ராணி துரைராஜ், மாவட்ட அமைப்பு சாரா ஒட்டுநர் அணி செயலாளரும், முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவருமான மாஸ்டர் எஸ்.ஜெயபால், மாவட்ட மாணவரணி இணைச் செயலாளர் ஜெய.இளங்கோவன், மாவட்ட வர்த்தகர் அணி செயலாளர் ஆர்.ஜி.பாலா, முன்னாள் ஒன்றியக்குழு துணைத் தலைவர் வாசுதேவன், மாவட்ட பிரதிநிதிகள் எஸ்.மூர்த்தி, தொழவூர் முனுசாமி, கிழக்கு ஒன்றிய எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் ஆலங்குடி வி. துரைராஜ், கிழக்கு ஒன்றிய அண்ணா தொழிற்சங்க துணை செயலாளர் லாயம் சிவசங்கர வேலன், நகர அவைத் தலைவர் ரத்னகுமார், நகர பொருளாளர் எஸ்.அருள்முருகன், நகர இணைச் செயலாளர் பட்டம் கிருஷ்ணமூர்த்தி, மாத்தூர் குமார், மோகன், ராஜா, எஸ்.பி.செந்தில், தமிழ்செல்வன் உள்ளிட்ட வார்டு செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர், தொடர்ந்து கட்சியின் கொடி ஏற்றப்பட்டது. நிகழ்ச்சியில் ஏராளமான கட்சி தொண்டர்கள், பொது மக்கள் திரளாக கலந்து கொண்டனர், அதனைத் தொடர்ந்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது