தென்காசி, அக் – 17

தென்காசி மாவட்டம், தென்காசி ஊராட்சி ஒன்றியம், மத்தளம்பாறை ஊராட்சியில் தீபாவளி திருநாளை முன்னிட்டு ஊராட்சி உறுப்பினர்கள், ஊராட்சியில் பணிபுரியும் பணியாளர்கள் அனைவருக்கும் ஊராட்சி மன்றத் தலைவர் மைதிலி மகேஷ் புத்தாடைகள் மற்றும் இனிப்புகளை வழங்கி தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

தென்காசி ஊராட்சி ஒன்றியம் மத்தளம்பாறை ஊராட்சியில் தீபாவளி திருநாளை முன்னிட்டு ஊராட்சி மன்றத் தலைவர் மைதிலி மகேஷ் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், ஊராட்சி செயலாளர், கணினி இயக்குனர்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட
பணித்தள பொறுப்பாளர்கள், துப்புரவு பணியாளர்கள் தூய்மை பணியாளர்கள், தூய்மை பணி வாகன ஓட்டுனர்கள்,மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குனர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் புத்தாடைகள் மற்றும் இனிப்புகள் வழங்கி தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சிக்கு மத்தளம்பாறை ஊராட்சி மன்ற தலைவர் மைதிலி மகேஷ் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வேலம்மாள் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலாளர் இ.சங்கரசுப்பிரமணியன் அனைவரையும் வரவேற்று பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் சுடலை, வேலம்மாள், சஞ்சீவ் குமார், கோபிராணி, இசக்கி, சுப்புலட்சுமி, மற்றும் ஊராட்சி மன்ற அலுவலக கணினி இயக்குனர்கள், மேல்நிலை நீர் தேக்க தொட்டி இயக்குனர்கள்,
துப்புரவு பணியாளர்கள் தூய்மை பணியாளர்கள், உட்பட அனைத்து பணியாளர்களும் கலந்து கொண்டனர்.

மத்தளம்பாறை ஊராட்சி மன்ற தலைவர் மைதிலி மகேஷ் அனைவருக்கும் புத்தாடைகள் மற்றும் இனிப்புகளை வழங்கி தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தார். முடிவில் மத்தளம்பாறை ஊராட்சி செயலாளர் இ‌.சங்கரசுப்பிர மணியன் அனைவருக்கும் நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *