கடலூர், மாவட்டம்
வடலூர் அருகே உள்ள தென் குத்து கிராமம் , நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் முதல் சுரங்கம் அருகே உள்ள தால்,முதல் சுரங்க விரிவாக்க பணிக்காக இந்த ஊரில் உள்ள விளை நிலங்களும் வீடுகளும் கையகப்படுத்த என் எல்சி நிர்வாகம் முடிவு செய்து அறிவிப்பு செய்தது இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர், இந்த நிலையில் உரிய இழப்பீடு வேலைவாய்ப்பும் வழங்காமல்,மாவட்ட நிர்வாகத்துடன் பேசி,அதற்கான எந்த உத்தரவாதமும் வழங்காமல்
வீடு நிலங்களை அகற்றக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்,
சுரங்க விதிமுறைப்படி குடியிருப்பு பகுதியில் இருந்து,500 மீட்டருக்கு இடைவெளியில் சுரங்கம் தோண்ட வேண்டும் என்கிற விதிமுறையை தாண்டி 50 மீட்டர் இடைவெளியில் குடியிருப்புக்கு அருகிலேயே அறிவிப்பு இன்றி சுரங்கம் தோண்டப்படுவதாகவும்,இதனால் வீடு சேதம் அடைகிறது, மண்புழுதிகள் காற்றில் பரவி உடல் நலம்பாதிக்கிறது.
இதனை கண்டித்து, நேற்றுகாலை,10 மணி அளவில்,வடலூர் சென்னை சாலையில்,ஆபத்தாரனபுரம் பஸ்நிறுத்தம் அருகே தென்குத்து கிராமமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த வடலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து,மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் மிரட்டி விரட்டி விரட்டி கைது செய்தனர். கைது செய்த கிராம மக்களை வடலூர் தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.இந்த சாலை மறியலால்வடலூர் சென்னை சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதித்தது, நெய்வேலி துணை போலிஸ் சூப்பிரண்டு தலைமையிலான போலீசார் போக்குவரத்து ஒழுங்குபடுத்தியபின்னர்
சென்னை சாலை போக்குவரத்து தொடங்கியது,சாலை மறியல் செய்த கிராம மக்கள் கூறியதாவது: எங்கள் வீடு நிலங்களை எங்கள் அனுமதியில்லாமல் எங்களை இங்கிருந்து வெளியேற்ற என்எல்சி நிறுவனம் நினைக்கிறது, நாங்கள் எங்கள் வாழ்வாதாரத்திற்காக போராடுகிறோம், எங்களை போலீஸ் மிரட்டும் வகையில் நடந்து கொள்கிறார்கள்,