திருவண்ணாமலை மாவட்டம் புதிய பேருந்து நிலையம் 10 ஏக்கர் பரப்பளவில் 34 கோடி மதிப்பில் கலைஞர் நூற்றாண்டு பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2025 டிசம்பர் 27ஆம் தேதி அப்போதைய முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பேருந்து நிலையத்தை துவங்கி வைத்தார்.


அதனைத் தொடர்ந்து புதிய பஸ் நிலையத்திலிருந்து சென்னை, திருச்சி ,மதுரை திருக்கோவிலூர் ,கடலூர், புதுச்சேரி உள்ளிட்ட வழித்தடங்களுக்கான பேருந்துகள் மட்டும் இயக்கப்பட்டது. பழைய பேருந்து நிலையத்திலிருந்து வேலூர் ,ஆரணி ,காஞ்சிபுரம் ,சேலம் பெங்களூரு, செங்கம் ஆகிய வழித்தடங்களுக்கான பேருந்துகள் இயங்கி வந்தன. புதிய பேருந்து நிலைய விரிவாக்க பணிகள் நடந்து வந்ததால் அங்கிருந்து அனைத்து பேருந்துகளும் இயக்குவது தாமதமானது.

இதனைத் தொடர்ந்து கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலைய பணிகள் முழுமையாக நிறைவு பெற்றதால் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து அனைத்து வழித்தடங்களுக்கான பேருந்துகளும் மே 24 , 2026 இன்று முதல் இயக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது. அதன் படி பழைய பஸ் நிலையத்தில் இருந்து வேலூர் ,ஆரணி, சேத்துப்பட்டு பெங்களூரு, காஞ்சிபுரம், சேலம் ,கோவை, போன்ற வழித்தடங்களுக்கு இயக்கப்பட்டு வந்த பேருந்துகள் இன்று முதல் புதிய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும்.


மேலும் வேலூர் ,காஞ்சிபுரம் ,ஆரணி உள்ளிட்ட சில குறிப்பிட்ட வழித்தடங்களில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள் மட்டும் கலெக்டர் அலுவலகம் ,தென்றல் நகர் பழைய பஸ் நிலையம் பெரியார் சிலை சந்திப்பு வழியாக புதிய பேருந்து நிலையத்திற்கு செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


பெரும்பாலான பேருந்துகள் அரசு மருத்துவக் கல்லூரி பைபாஸ் சாலை வழியாக புதிய பேருந்து நிலையங்களுக்கு செல்லும் வகையில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து, பழைய பேருந்து நிலையம் கலெக்டர் அலுவலகம் வழியாக மருத்துவக் கல்லூரி வரை 20 மினி பேருந்துகள் மற்றும் டவுன் பஸ்கள் இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
திருவண்ணாமலை வேங்கி கால் செய்தியாளர் சிவசக்தி யோகினி.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *