கம்பம் ஸ்ரீ சக்தி விநாயகர் வெற்றி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் சாதனை


தேனி மாவட்டம் கம்பம் சக்திவிநாயகர்மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு  பொதுத் தேர்வில் தேர்வு எழுதிய 48 பேரும் தேர்ச்சி பெற்று 100 சதவீத தேர்ச்சி என பெற்று சாதனை படைத்துள்ளனர்.

இதன்படி மாணவி நித்யஸ்ரீ 500-க்கு 494 மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தையும் சிவஹர்ணி 493 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தையும் ,திவ்யஸ்ரீ 492 மதிப்பெண்கள் பெற்று நான்காம் இடத்தை பிடித்து வரலாற்று சாதனை படைத்துள்ளனர். மேலும் 480 மதிப்பெண்களுக்கு மேல் 7 பேரும், 450 மதிப்பெண்களுக்கு மேல் 19பேரும் , 450 மதிப்பெண்களுக்கு மேல் 38 பேர் எடுத்துள்ளனர். இதேபோல் கணிதம் பாடத்தில் 6 பேர் 100க்கு 100 மதிப்பெண்ணும் ,அறிவியல் பாடத்தில் 7 பேரும்,  தமிழ் பாடத்தில் 4 பேர் 100க்கு 98 மதிப்பெண்ணும், ஆங்கிலம் பாடத்தில் 5 பேர் 99 மதிப்பெண்ணும், சமூக அறிவியல் பாடத்தில் 5 பேர் 99 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்தனர். சாதனை படைத்த மாணவ,மாணவிகளுக்கு பள்ளிதாளாளர் அச்சுதநாகசுந்தர் ,செயலர் கவிதாஅச்சுதநாகசுந்தர் இனிப்புகள் கொடுத்தும், சிறப்பு பரிசுகள் வழங்கி மனதார வாழ்த்தி பாராட்டினார் .

பின்னர் பள்ளி தாளாளர் கருப்பசாமி கூறும் போது எமது சக்தி விநாயகர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தொடர்ந்து 31 ஆண்டுகளுக்கு மேலாக தமிழக அரசு நடத்தும் பொதுத்தேர்வு மற்றும் போட்டி தேர்வுகளில் எங்கள் பள்ளி மாணவ மாணவிகள் சாதனை படைத்து வருகின்றனர்.

மேலும் படிப்பில் பின்தங்கிய மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு அந்த கல்வியாண்டிலே நடத்தப்படும் சிறப்பு தேர்வுகளில் பங்கேற்று முழுமையாக தேர்ச்சி பெற்று வருவது எங்கள் பள்ளியின் தனிச்சிறப்பு. இதனைத் தொடர்ந்து மாணவ மாணவிகள் அதிக மதிப்பெண் பெறுவதற்கு  பாடுபட்ட பள்ளி தலைமையாசிரியர் மற்றும் இருபால் ஆசிரியர்களை வாழ்த்தினார் .இந்நிகழ்வி பள்ளி முதல்வர்கள் கருப்பசாமி ,ஆனந்த்குமார் மற்றும் பள்ளி இருபால் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *