புதுச்சேரி:

தொழிற்சங்கத் தலைவராக இருந்து எண்ணற்ற தொழிலாளர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டதுடன், கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக “மக்கள் பணியே மகத்தான சேவை” என்ற உயரிய நோக்கத்தோடு தொடர்ந்து பொதுச்சேவையில் தன்னை அர்ப்பணித்து செயல்பட்டு வரும் ஏ கே ஆர் தேசிய மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் திரு. ஏ. கே. ராஜசேகர் அவர்களுக்கு, புதுச்சேரி சட்டமன்றத்தில் நியமன சட்டமன்ற உறுப்பினர் (Nominated MLA) பதவி வழங்கிட புதுச்சேரி துணைநிலை ஆளுநர் அவர்கள் மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்ய வேண்டும் என்று கட்சியின் பொதுச் செயலாளர் திரு. ஜி. தேவநாதன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள விரிவான அறிக்கையில் கூறியிருப்பதாவது:

«“எங்கள் தலைவர் திரு. ஏ. கே. ராஜசேகர் அவர்கள் வெறும் அரசியல் தலைவராக மட்டுமல்லாமல், மக்களின் உண்மையான சேவகராக கடந்த கால் நூற்றாண்டாக பொதுவாழ்வில் செயல்பட்டு வருபவர். தொழிலாளர்கள், ஏழை எளிய மக்கள் மற்றும் அடித்தட்டு மக்களின் பிரச்சனைகளை நேரடியாகக் கேட்டு தீர்வு கண்ட அனுபவமிக்க தொழிற்சங்கத் தலைவராகவும் அவர் திகழ்ந்து வருகிறார்.»

«பல்வேறு சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றிக்கான வியூகங்களை அமைத்து, பல வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்த அரசியல் அனுபவம் அவருக்கு உண்டு. மேலும், 2009-ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் புதுச்சேரி தொகுதியில் நேரடியாகப் போட்டியிட்ட கள அனுபவமும் பெற்றுள்ளார்.»

«தேசியக் கட்சியின் மாநிலத் தலைவராகவும், மாநிலக் கட்சியின் முக்கிய நிர்வாகியாகவும் பணியாற்றிய அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு, தற்போது ‘ஏ கே ஆர் தேசிய மக்கள் கட்சி’ என்ற அரசியல் இயக்கத்தை நிறுவி, அதன் மூலம் புதுச்சேரி மக்களின் உரிமைகள், சமூக நலன், தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் அடித்தட்டு மக்களின் வாழ்வாதார முன்னேற்றத்திற்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.»

«புதுச்சேரி போன்ற யூனியன் பிரதேசத்திற்கு அனுபவமிக்க, மக்கள் நல சிந்தனை கொண்ட, சட்டமன்ற நடைமுறைகளை நன்கு அறிந்த ஆளுமைகள் அவசியம் தேவைப்படுகிறது. அந்த வகையில், திரு. ஏ. கே. ராஜசேகர் அவர்கள் நியமன எம்.எல்.ஏ ஆக சட்டமன்றத்திற்குள் வரும்போது, மக்களின் பிரச்சனைகளை தீர்க்க உறுதுணையான ஆலோசனைகளையும், நிர்வாகத்திற்கு வழிகாட்டும் அனுபவங்களையும் வழங்கக்கூடிய ஒரு முன்மாதிரி மக்கள் பிரதிநிதியாக இருப்பார்.»

«எனவே, புதுச்சேரி மாநில அரசும், மதிப்பிற்குரிய புதுச்சேரி துணைநிலை ஆளுநர் அவர்களும், திரு. ஏ. கே. ராஜசேகர் அவர்களின் நீண்டகால மக்கள் சேவை, தொழிற்சங்க அனுபவம், தேர்தல் கள அனுபவம் மற்றும் அரசியல் முதிர்ச்சியை கருத்தில் கொண்டு, அவருக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்கிட மாண்புமிகு இந்தியக் குடியரசுத் தலைவர் மற்றும் மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சருக்கு உடனடியாக அதிகாரப்பூர்வ பரிந்துரை அனுப்ப வேண்டும் என்று ஏ கே ஆர் தேசிய மக்கள் கட்சியின் சார்பாக வலியுறுத்துகிறோம்.

ஜி. தேவநாதன் பொதுச் செயலாளர்
ஏ கே ஆர் தேசிய மக்கள் கட்சி,
புதுச்சேரி.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *