கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பள்ளிகள் திறந்த முதல் நாளான நேற்று முன்தினம் அனைத்து மாணவர்களுக்கும் தமிழக அரசு வழங்கும் விலையில்லா நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது
அதேபோல வால்பாறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்களும் பதினொன்றாம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ மாணவர்களுக்கு பாடப்புத்தகங்களும் வழங்கப்பட்டது
தலைமையாசிரியர் சிவன் ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாணவர்கள் ஆர்வமுடன் நோட்டு புத்தகங்களை வாங்கி மகிழ்ச்சியடைந்துள்ளனர்