கோவை மாநகர் மாவட்ட இந்து முன்னணியின் மாவட்ட பொதுக்குழு குஜராத் சமாஜ்பவனில் நடைபெற்றது.மாநிலத் தலைவர் காடேஸ்வரா.சி சுப்பிரமணியம் அவர்கள் சிறப்புரையாற்றினார்

சத்ரபதி வீரசிவாஜி இந்து சாம்ராஜ்யம் அமைத்த தினத்தை இந்து முன்னணி ஆண்டுதோறும் தேதி விமர்சையாக இந்து சாம்ராஜ்ய தினவிழாவாக கொண்டாடி வருகிறது .
அதேபோல இந்த ஆண்டு வருகின்ற ஜூன் 28ஆம் தேதி அன்று தமிழகம் முழுக்க ஆயிரக்கணக்கான இடங்களில் இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

கடந்த திமுக ஆட்சியில் கோவில்களில் பல்வேறு விதமான பாதிப்புகள் ஏற்பட்டன.
நீதிமன்றம் தீர்ப்பளித்தும் கூட திமுக ஆட்சியில் திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்படவில்லை .
புதிதாக அமைந்துள்ள ஜோசப் விஜய் அவர்களின் த.வெ.க அரசு திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும் என இந்து முன்னணி சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

இந்து முன்னணி கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக கோவில்களில் கட்டண தரிசன முறையை ரத்து செய்ய கோரி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தை நடத்தி வருகிறது.
அதேபோல இந்த ஜூலை மாதம் 26 ஆம் தேதி அன்று தமிழகம் முழுவதும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது
என பேசினார் .

மாநில பொதுச் செயலாளர் ஜே எஸ் கிஷோர் குமார் மாநில நிர்வாக குழு உறுப்பினர் சதீஷ்
கோட்டக் பொதுச்செயலாளர் பாபா கிருஷ்ணன் கோட்ட செயலாளர் உருவை பாலன்
மாவட்டத் தலைவர் தசரதன் மாவட்ட செய்தி தொடர்பாளர் C.தனபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.400 க்கும் மேற்பட்டவர்கள் நகர் ஒன்றிய பொறுப்பாளர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர் .

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *