கோவை உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழ்நாடு உரிமம் பெற்ற நில அளவர்கள் சங்கத்தின் மாநில தலைவர் செந்தில்குமார், மாநில பொதுச் செயலாளர் முத்து சுரேந்தர், மாநில பொருளாளர் கார்த்திகேயன், மாநில மக்கள் தொகை அதிகாரி இசக்கி ராஜூவ், ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது.. தமிழ்நாடு அரசின் ஒரத்தநாடு நில அளவை பயிற்சி நிலையத்தில் முறையாக பயிற்சி பெற்று, அரசாணை அடிப்படையில் தற்கால பணியாளர்களாக களப்பணியில் ஈடுபட்டு வரும் எங்களை நேரடியாக எடுத்து பணியமர்த்தும் வரை காலமுறை ஊதியத்தில் பணியமர்த்த வேண்டும் எனவும், டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலம் புதிய ஆட்களை தேர்வு செய்யும் நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்திட வேண்டும் என்று கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்

கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் முழு அர்ப்பணிப்போடு குறைந்தபட்ச சேவை கட்டணத்தில் மக்கள் பணி ஆட்சி வருகின்றதாகவும், தற்பொழுது தமிழ்நாடு அரசு தேர்வாணையம் மூலமாக, புதிய நில அளவர்களை தேர்வு செய்வதாக தெரிய வருகின்றது.

நாங்கள் தமிழ்நாடு அரசால் முறையாக நடத்தப்படும் தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாட்டில் உள்ள அரசு நில அளவை பயிற்சி மையத்தில் முழுமையான மற்றும் முறையான பயிற்சிகளை முடித்து உரிமம் பெற்று அர்ப்பணிப்புடன் பணிபுரிந்து வருகின்ற நில அளவையர்கள்.

முக்கியமாக நாங்கள் அனைவரும் 2019 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணையின் அடிப்படையில் தற்காலிக பணியாளர்களாக பணிபுரிந்து வருகிறோம். இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட சிவில் இன்ஜினியரிங் பட்டதாரிகள் நாங்கள், எனவே நில அளவைப் பயிற்சியினை முழுமையாக பெற்று தகுதியுடன் நில அளவை இயக்குனரகத்தின் கீழ் வரும் அனைத்து நில அளவை பணிகளையும் நாங்கள் செய்து வருகின்றோம். எனவே எங்களை நேரடியாக எடுத்து பணியமர்த்தும் வரை காலம் வரை ஊதியத்தில் பணியமர்த்த வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு மனு அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *