நாகப்பட்டினம்,செப்.29-
நாகை மாவட்டம் திட்டச்சேரி பஸ் நிலையம் அருகில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி வளாகத்தில் உலக ரேபிஸ் தினத்தை முன்னிட்டு வளர்ப்பு நாய்கள் மற்றும் பூனைகளுக்கான இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

முகாமிற்கு கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் கலையரசி, உதவி இயக்குனர் தெட்சிணாமூர்த்தி ஆகியோர் தலைமை தாங்கினார். திட்டச்சேரி பேரூராட்சி மன்ற தலைவர் ஆயிஷா சித்திகா, செயல் அலுவலர் கலியப்பெருமாள், கால்நடை நோய் புலனாய்வு துறை உதவி இயக்குனர் சங்கீதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த முகாமில் 135 வளர்ப்பு நாய்கள் மற்றும் பூனைகளுக்கு இலவச வெறிநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில் கால்நடை உதவி மருத்துவர்கள் சிவசூரியன், பெரோஸ் முகமது, வாஞ்சிநாதன், பூபதி, பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் நர்கீஸ்பானு, இளநிலை உதவியாளர் சாமிநாதன், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *