நாகப்பட்டினம்,செப்.29-
திருப்புகலூர் ஊராட்சியில் சீரான மின்சாரம் இன்றி சிரமப்படும் 4 கிராம மக்கள் மின்சாரம் நடந்த வேண்டுமென பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


சீரான மின்சாரம்
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருப்புகலூர் ஊராட்சி ஆமப்பட்டம், நாயக்கர் பகுதி, மேலப்பகுதி, அரசூர் உள்ளிட்ட 4 கிராமங்களில் சுமார் 300 – க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மேற்கண்ட பகுதிகளுக்கு சாலையோரம், வயல்வெளிகளில் மின்கம்பம் அமைக்கப்பட்டு மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மேற்கண்ட பகுதிகளுக்கு சீரான மின்விநியோகம் செய்வதற்கு மேல பகுதியில் ஒரே ஒரு மின்மாற்றி மற்றும் அமைக்கப்பட்டு மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

மேலும் பல்வேறு பகுதிகளில் மரக்கிளைகள் மின் கம்பிகள் மீது சாய்ந்து இருப்பதாலும், மின்கம்பிகள் சேதமடைந்து தாழ்வாக செல்வதாலும், மின்கம்பங்கள் சாய்ந்து இருப்பதாலும் அப்பகுதிகளுக்கு சீரான மின் வினியோகம் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மேலும் லேசான காற்று வீசும் நேரங்களில் கூட மின் கம்பிகள் அறுந்து விழுந்து பல மணி நேரம் மின்விநியோகம் தடைப்பட்டு வருகிறது. மெயின் ரோட்டில் இருந்து மேற்கண்ட கிராமங்களுக்கு செல்ல 2 முதல் 4 கிலோமீட்டர் தூரம் வரை இருள் சூழ்ந்த பகுதிகளுக்கு சென்று வர வேண்டி இருப்பதால் பகுதி பொதுமக்கள் மிகுந்த அச்சப்பட்டு வருகின்றனர்.


நடவடிக்கை
இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடன் நடவடிக்கை மேற்கொண்டு சேதமடைந்த மின் கம்பிகள் மற்றும் மின்கம்பங்களை சீரமைத்து நான்கு கிராமங்களுக்கும் தனித்தனியாக மின்மாற்றிகள் அமைத்து தர வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து கார்த்துள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *