புதுச்சேரி மேற்கு காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த எஸ்.பி ஏ.சுப்ரமணியன், காரைக்கால் (தெற்கு] எஸ்.பி ஆக பணியாற்றும்போது பெண் காவலருக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
புகார் அளிக்கப்பட்டும் எஸ்.பி மீது எந்தவித நடவடிக்கையும் இல்லை என பாதிக்கப்பட்ட பெண் காவலரின் தாயார் நீதிமன்றத்தை நாடிய நிலையில், புகார் தொடர்பாக உள்புகார் குழு விசாரணை செய்து தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையின் அடிப்படையில் சுப்ரமணியனை பணியிடை நீக்கம் செய்து புதுச்சேரி காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
__
S.செய்யது தாஜுல் உசேன்
மாவட்ட செய்தியாளர்
காரைக்கால்