S.செய்யது தாஜுல் உசேன்
மாவட்ட செய்தியாளர்
காரைக்கால்

புதுச்சேரி மாநிலம்: காரைக்கால் வேளாண் துறையின் கீழ் இயங்கி வரும் வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை (ஆத்மா) சார்பில், நிரவி உழவர் உதவியகத்தில் ‘சேவா சங்கல்ப் அபியான்’ மற்றும் தென்னை ஒருங்கிணைந்த மேலாண்மை குறித்த பண்ணைப் பள்ளி நடைபெற்றது.

இப்பயிற்சியில் நிரவி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். விவசாயிகளுக்கு தென்னை சாகுபடியில் ஒருங்கிணைந்த மேலாண்மை முறைகள், மண்வளப் பாதுகாப்பு மற்றும் கரிமப் பொருட்களின் பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

பயிற்சியின் ஒரு பகுதியாக, கலந்து கொண்ட விவசாயிகளுக்கு மண்வள மேலாண்மை அட்டைகள், நுண்ணூட்டக் கலவை மற்றும் கரிமப் பொருட்களை மட்கச் செய்வதற்கான நுண்ணுயிர் கலவைகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நிரவி வேளாண் அலுவலர் எம். இந்துமதி, ஆத்மா உதவி வட்டார தொழில்நுட்ப மேலாளர் பார்த்திபன் மற்றும் உழவர் உதவியக விரிவாக்கப் பணியாளர்கள் செய்திருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *