S.செய்யது தாஜுல் உசேன்
மாவட்ட செய்தியாளர்
புதுச்சேரி மாநிலம்: காரைக்கால் (தெற்கு) காவல் கண்காணிப்பாளராக பணியாற்றியபோது பெண் காவலருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்த புகாரின் பேரில், புதுச்சேரி மேற்கு காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த எஸ்.பி. சுப்ரமணியன் சமீபத்தில் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.
இந்நிலையில், சுப்ரமணியன் மீது காரைக்கால் நகர காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெண் காவலர் அளித்ததாக கூறப்படும் பாலியல் தொல்லை புகாரின் அடிப்படையில் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. எனினும், அவர் மீது எந்தெந்த சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்த அதிகாரப்பூர்வ விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.
வழக்குப்பதிவு தொடர்பான கூடுதல் விவரங்களை காவல்துறை தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது.