புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம், திருபட்டினம் அரசு புதிய தொடக்கப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. மாணவ-மாணவியர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது அறிவியல் படைப்புகளை காட்சிப்படுத்தினர். பெற்றோர்கள் மற்றும் திரளான பொதுமக்கள் கண்காட்சியை பார்வையிட்டு மாணவ-மாணவிகளை பாராட்டினர்.
கீழையூர் அரசு தொடக்கப்பள்ளி தலைமை | ஆசிரியர் அரவிந்தராஜ், திருபட்டினம் அரசு பெண்கள் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் சரிதா ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டு சிறந்த அறிவியல் படைப்புகளை தேர்வு செய்தனர். கண்காட்சிக்கான ஏற்பாடுகளை பள்ளியின் பொறுப்பாசிரியர் அன்புச்செல்வி மற்றும் ஆசிரிய-ஆசிரியர்கள் செய்திருந்தனர்.