கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள தூய இருதய மேல்நிலைப் பள்ளியில் சுமார் 4.30 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர் இந்நிலையில் அப்பள்ளியில் உள்ள சத்துணவு மையத்தின் மூலம் தரமான உணவு வழங்கப்படுகிறா என்பதை கண்காணிக்க இன்று திடீரென அங்கு ஆய்வு மேற்க் கொண்ட நகர்மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி செல்வம் பள்ளியின் தலைமையாசிரியை சுசிலாமேரி முன்னிலையில் சத்துணவுமையம், தயாரிக்கப்பட்ட உணவு, மாணவர்களின் வருகைப் பதிவேடு உள்ளிட்டவைகளை ஆய்வு மேற்கொண்டார்
பின்பு இன்று தயாரிக்கப்பட்டிருந்த புதினா சாப்பாடு, முட்டை தக்காளி கூட்டு மற்றும் கிழங்கு பொரியல் ஆகிய உணவுகளை அனைத்து மாணவர்களுக்கும் வழங்கியதுடன் மாணவர்களிடம் ஏதேனும் குறைகள் உள்ளதா என்று கேட்டறிந்தார் இந்த ஆய்வின் போது முன்னால் நகர்மன்ற உறுப்பினர் செல்வம், சத்துணவு அலுவலர் தினேஷ் மற்றும் பலர் உடனிருந்தனர்