தவப்புதல்வி தமிழ் காலாண்டிதழ் வெளியீட்டு விழா சிவகங்கை சீதா லட்சுமி ஆச்சி மகளிர் கல்லூரியில் வைத்து கல்லூரி முதல்வர் முனைவர் நாகேஸ்வரி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

திருச்செங்கோடு கே.எஸ்.ஆர். மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வணிகவியல் துறை இயக்குனர் முனைவர் துறை குமரேசன் அவர்கள் முன்னிலை வகித்தார். ஐந்திணை தென் தமிழியல் ஆய்வு மன்றத்தின் அமைப்பாளர் மற்றும் தவப்புதல்வி தமிழ் காலாண்டிதழின் இதழாசிரியர் முனைவர் சுபத்ரா செல்லத்துரை அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார்.

லிபியா சபா பல்கலைக் கழகத்தின் சுற்றுச்சூழல் அறிவியல் துறை சார்ந்த மேனாள் பேராசிரியர், முனைவர் ரவீந்திரன் அவர்கள் தவப்புதல்வி காலாண்டிதழை வெளியிட அபுதாபி DAM திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி முனைவர் ஸ்ரீதேவி சிவானந்தம் அவர்கள் முதல் இதழை பெற்றுக்கொண்டார்.

நீ காண விரும்பும் மாற்றமாய் மாற்றத்தை நோக்கிய பயணம் என்கிற தவப்புதல்வி இதழின் நோக்கத்தை மையப்படுத்தி காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரி தமிழ் உயராய்வு மையத்தின் உதவிப் பேராசிரியர் முனைவர் பாரதி ராணி அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.


இந்நிகழ்வில் சூரியன் பண்பலை மூத்த அறிவிப்பாளர் திருமதி விஜி பூரணசிங் , முனைவர் வள்ளியம்மாள் , முனைவர் ஸ்ரீலங்கா மீனாட்சி , சீதா லட்சுமி ஆச்சி மகளிர் கல்லூரியின் பொருளியல் துறை மற்றும் வணிகவியல் துறை பேராசிரியர்கள், மாணவர்கள் பெருவாரியாக கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *