வலங்கைமான் வர்த்தகர்சங்கத்தின் சங்க கட்டிடத்தை சீரமைக்கும்பணிக்கு தவ்ஹீத் ஜமாஅத்தாரின் வர்த்தகர்கள் ஒருங்கிணைந்து ரூபாய்25ஆயிரத்தை சங்கத்திற்கு அளித்தார்கள்
திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் வர்த்தகர் சங்க கட்டிடத்தை சீரமைக்கும் பணிக்கு வலங்கைமான்
தவ்ஹீத் ஜமாஅத்தாரின் வர்த்தகர்கள் ஒருங்கிணைந்து ரூபாய்
25 ஆயிரத்தை சங்கத்துக்கு அளித்தார்கள். ஜமாத் தலைவர் ஷாஜகான், செயலாளர் அமீர் உசேன்,பொருளாளர் நூருல் அமீர் மற்றும் நிர்வாகிகள் வர்த்தகர் சங்க தலைவர் கே. குண சேகரன் அவர்களிடம் வழங்கினார்கள்.
உடன்சங்க கெளரவ தலைவர்என். பரதாழ்வார், முன்னாள் பொருளாளர்பழனிசாமி, துணைத் தலைவர் என். மாரிமுத்து, செயலாளர்ஜி. திருநாவுக்கரசு, பொருளாளர் எஸ். புகழேந்தி, இணைச் செயலாளர் எஸ். சிவ சங்கர் ஆகியோர் உடனிருந்து நிதியை பெற்றறுக் கொண்டு நன்றியை தெரிவித்தனர்.