மன்னார்குடி செய்தியாளர் தருண்சுரேஷ்
மன்னார்குடி உப்புக்கார தெரு முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி முதல் வெள்ளிக்கிழமை விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகரின் புகழ்வாய்ந்த மாரியம்மன் கோவில் உப்புக்கார தெரு முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆடி முதல் வெள்ளிக்கிழமையை ஒட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது இதில் பால் , மஞ்சள் , இளநீர் , பஞ்சாமிர்தம் , சந்தனம் உள்ளிட்ட பல்வேறு விதமான மங்களப் பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்தனர்.
அதனைத் தொடர்ந்து முத்து மாரியம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்து சிறப்பு தீப ஆராதனைகள் நடத்தப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.