ஜெ சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர்
திருவாரூரில் பள்ளி கல்வித்துறையின் சார்பில் போதைப் பழகத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணி
திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ரயில்வே சந்திப்பு நிலையம் முகப்பு வாயிலில் பள்ளி கல்வித்துறையின் சார்பில் போதைப் பழகத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ கொடியசைத்து துவக்கி வைத்தார்
நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன் பங்கேற்றார் அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பேசும்போது பேசியதாவது
போதைப் பழக்கத்தால் தீய விளைவுகளை முழுமையாக அறிந்து கொண்டு போதைப் பழகத்திற்கு அடிமையாக கூடாது குடும்பத்தினர் நண்பர்களுடன் ஒன்றிணைந்து போதைப் பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகளில் முன்நின்று செயல்பட வேண்டும்.
அதேபோன்று போதைப் பழக்கத்திற்கு உள்ளானவர்களை மீட்டெடுத்து அவர்களை நல்வழிபடுத்துவதில் ஒவ்வொருவரின் பங்களிப்பும் மிக முக்கியமானது போதைப் பொருட்களின் உற்பத்தி, நுகர்வு, பயன்பாடு ஆகியவற்றிக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு கொள்ள வரும் என கேட்டுக்கொண்டார்
பேரணியில் 500-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவியர்கள் இருபால் ஆசிரிய ஆசிரியர்கள் பங்கேற்றனர் பேரணியானது ரயில்வே சந்திப்பு நிலையத்தில் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக திருவாரூர் நகராட்சி அலுவலகம் சென்றடைந்தது
நிகழ்வில், மாவட்ட சமூக நல அலுவலர கார்த்திகா, நகர்மன்ற உறுப்பினர் பிரகாஷ், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் சங்கர், நகராட்சி மேலாளர் முத்துகுமார் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்