வலங்கைமான் தையல் நாயகி சமேத ஸ்ரீ வைத்தீ
ஸ்வரர் ஆலயத்தில் நடைபெறும் சதசண்டி
மஹா யாகத்தில் முன்னாள் அமைச்சர் காமராஜ் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பாய்க்கார தெருவில் உள்ள தையல்நாயகி சமேத ஸ்ரீ வைத்தீஸ்வரர் ஆலயத்தில் நடைபெறும் சதசண்டி மஹா யாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விக்னேஸ்வர பூஜை, ஸ்ரீ
தூர்க்கை அம்மன் மற்றும் ஸ்ரீ மஹாலக்ஷ்மி
க்கு விசேஷ அபிஷேகம், கோ பூஜை மற்றும் ஸ்ரீ தேவி மஹாத்மியம் பாராயணம், பத்து ஆச்சார்ய பெருமக்கள் கலந்து கொண்டு செய்யும் சதசண்டி ஹோமத்தில்
முன்னாள் அமைச்சரும்,நன்னிலம் சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.காமராஜ் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். உடன் வலங்கைமான் மேற்கு ஒன்றிய செயலாளர் குமாரமங்கலம் சங்கர்,நகர செயலாளர் சா. குணசேகரன், முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் மாஸ்டர் ஜெயபால், மாவட்ட மாணவரணி இணைச் செயலாளர் ஜெய. இளங்கோவன், தகவல் தொழில்நுட்ப பிரிவு திருச்சி மண்டல தலைவர் ராஜராஜ சோழன், மாவட்ட பிரதிநிதிகள் மூர்த்தி, ஆர். ஜி. பாலா, நகர இணைச் செயலாளர்பட்டம் கிருஷ்ணமூர்த்தி,
பேரூராட்சி மன்ற உறுப்பினர் அருள் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். யாகத்தை திப்பிராஜபுரம்
சர்வ சாதகம் ஜெ. வெங்கடேச சிவாச்சாரியார் தலைமையில் நடைபெற்றது.