மகிழ்ச்சி, கொண்டாட்டம், உங்கள் மனதில் இடம் பிடித்த புரோசோன் மால் ஆறாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த மகிழ்ச்சியை தள்ளுபடிகள், பரவசமூட்டும் பல சலுகைகளுடன், பொழுது போக்கு அம்சங்களுடன் பொது மக்களுடன் இணைந்து கொண்டாடுகின்றது.
6-ம் ஆண்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக கோவை மாவட்ட ஆட்சியர் திரு. கிராந்தி குமார் பாடி மற்றும் கோவை மாநகர காவல் துறை ஆணையாளர் திரு. வி. பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து இன்று மாலை மனம் கவரும் கவர்ச்சிகரமான ஆடை அலங்கார அணிவகுப்பு அதோடு, மின்சாரம் பாய்ச்சும் மிக்ஸ் டேப் வழங்கும் ஜூம்பா டான்ஸ் ஆகியவையும் நடைபெற்றன.
நாளை ஜூலை 22 மெஸ்மரைசிங் பெலிடி டான்ஸ் நடைபெறம்.
ஜூலை 23-ல் இஎம்ஐ சானல் வழங்கும் திகைப்புட்டும் நட்சத்திரங்கள் பங்கேற்கும் சிறப்பான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
ஜூலை 21 முதல் 23 வரை மூன்று நாட்களும் ஷாப்பிங் செய்து பல்வேறு சலுகைகளுடன் 60 சதம் தள்ளுபடியை பெறுங்கள். ஆடைகள் முதல் எலக்ட்ரானிக் பொருட்கள் வரை, வீட்டு அலங்காரம் முதல் அழகு சாதன பொருட்கள் வரை அனைத்தும் ஆண்டு விழா துவக்கத்தை முன்னிட்டு வழங்கப்படுகின்றன.
மேலும், 2999-க்கும் மேல் ஷாப்பிங் செய்வோருக்கு எங்களது உணவு பங்குதாரர்கள் வழங்கும் 300 ரூபாய் மதிப்புள்ள வவுச்சர்களை பெற்று மகிழுங்கள். ஷாப்பிங் செய்யும்போதே நாவிற்சுவையான உணவு வகைகளை உண்டு களியுங்கள்.
ஆண்டு விழாவை கொண்டாடும் இந்த நன்னாளில், எங்களுக்கு ஆதரவளித்து வரும் கோவை நகருக்கு அன்பையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம். கோவை நகர மக்களையும், அருகில் உள்ள ஊரக மக்களையும் ஆண்டு விழாவை கொண்டாட அன்போடு அழைக்கிறோம். வாழ்நாளில் மறக்க முடியாத நன்னாளாக இது இருக்கட்டும்.