வறட்சி, அதிக வெப்பத்தில் நெல் மணிஅதிகம் உற்பத்தியாக
வேளாண் துறையினர்ஆலோசனை.
நெல் வறட்சி மற்றும் அதிக வெப்பத்தை தாங்கி வளரவும், பூக்களில் மலட்டு தன்மைகுறைக்கவும் அதிக நெல் மணி பிடித்து உற்பத்தி அதிகரிப்பதற்காக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மூலம்வெளியிடப்பட்ட நெல் ரீப்கரைசலை பயன்படுத்தாலாம்” என்று, வேளாண்மை உதவி இயக்குனர் ஜெயசீலன்விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது:ஒரு ஏக்கருக்கு 6கிலோ
நெல் ரீப் கரைசலை பயன்படுத்தி, இரண்டு முறை இலை வழியாகதெளிக்க வேண்டும். ஒரு முறை ஒர் ஏக்கருக்கு இலை வழியாக தெளிக்க200 லிட்டர் தண்ணீரில் 3கிலோ நெல் ரீப்பை கலந்து தயாரிக்கப்பட்ட கரைசலை பயன்படுத்த வேண்டும்.
பூட்டைப் பருவத்தில் முதல் முறையும், அதன் பின் 10
நாட்கள் கழித்து தலா 3 கிலோ வீதம் தெளிக்க வேண்டும். மேலும் கரைசலுடன் தேவையான அளவு ஒட்டு
திரவமும் சேர்க்க வேண்டும்.
கரைசலை பயன்படுத்துவதன் மூலம் வறட்சி மற்றும் அதிக வெப்பத்தை தாங்கி வளரும் சம்பா பருவத்தில் நெல்லில் ஏற்படும் பூக்களின் மலட்டுத்தன்மை குறையும். பிடிக்கும் திறன் அதிகரிக்கும். மேலும் 10 சதவீதம் வரை மகசூல் அதிகரிக்கும்.
கோயம்புத்தூரில் உள்ளதமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பயிர் வினைகள் துறையின் பேராசிரியர் மற்றும் தலைவரை தொடர்பு கொண்டு விவசாயிகள் தகவல் பெறலாம் அல்லது தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின்விற்பனை இணையதளம் மூலமும்பல்வேறு தகவல் பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.