மதுராந்தகம் செங்கல்பட்டு மாவட்டம்
பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள்திருவண்ணாமலை மாவட்டம் ஆகியவை ஒருங்கிணைந்தலயன்ஸ் மாவட்டம் 324 I சார்பில் லயன்ஸ் ஆண்டின் தொடக்கத்தையொட்டிமாவட்டத்தில் உள்ள 90 சங்கங்களின் பதாகை அணிவகுப்பு அச்சிறுப்பாக்கத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மாவட்டத் தலைவர் இரவிச்சந்திரன் தலைமை தாங்கி மாவட்டத்திலுள்ள அனைத்து சங்கங்களுக்கும் புதிய பதாகைகள் வழங்கினார்.
இதில்மாவட்ட ஆளுநர் மதியழகன்,சிறப்பு விருந்தினராக பங்கேற்று, பதாகை அணிவகுப்பு மற்றும் விழிப்புணர்வு ஊர்வலத்தைதொடக்கி வைத்தார்.
மேலும்மாவட்டத்திலுள்ள அனைத்து சங்கங்களின் தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகியோர் பதாகைகளை ஏந்தியப்படி கண் தானம் விழிப்புணர்வு, நீரிழிவு நோய் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை அச்சிறுப்பாக்கம் பஜார் பகுதியில் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் நடத்தினர்.
இந்த ஊர்வலத்தில் முன்னாள்மாவட்ட ஆளுநர்கள் நரசிம்மன்,
சாயர் அரவிந்த் குமார், ஆர்த்திஸ்வரி, ராஜேந்திரன், மாவட்ட முதல் துணை ஆளுநர் அன்பரசு,இரண்டாம் துணை ஆளுநர் அம்சவல்லி, உட்பட மாவட்ட தலைவர்கள் லயன் சங்க உறுப்பினர்கள் 500 -க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.