ஜே சிவகுமார், திருவாரூர் மாவட்ட செய்தியாளர்
திருவாரூர் தியாகராஜசுவாமி கோயிலில் ஆடிப்பூர உற்சவ தேரோட்டம்
திருவாரூர் தியாகராஜர் கோயிலில் கமலாம்பாள் ஆடிப்பூர உற்சவ தேரோட்டம் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.
திருவாரூர் தியாகராஜர் கோயில், நாயன்மார்களால் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாக விளங்குகிறது.
தேவாரப் பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 87}ஆவது சிவத்தலமாகும். கோயிலின் மூன்றாம் பிரகாரத்தின் வடகிழக்குத் திசையில் இரண்டு கால்களையும் மடக்கி அமர்ந்த நிலையில், கமலாம்பாள் காட்சியளிக்கிறார் கமலாம்பாளின் சிறப்பை போற்றும் வகையில் ஆண்டுதோறும் ஆடிப்பூர விழா நடைபெறுவது வழக்கம்.
இதையொட்டி, நிகழாண்டு ஆடிப்பூர உற்சவத்துக்கான பந்தக்கால் முகூர்த்தம் கமலாம்பாள் சந்நிதி முன்பு ஜூன் 28 ஆம் தேதி நடைபெற்றது. விழாவுக்கான கொடியேற்றம் ஜூலை 13 ஆம் தேதி இரவு நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து, கேடக உற்சவம், இந்திர விமானம், பூத வாகனம், வெள்ளி யானை வாகனம், வெள்ளி ரிஷப வாகனம், கைலாச வாகனம் ஆகியவற்றில் அம்பாள் அருள்பாளித்தார்
முக்கிய நிகழ்வாக வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு மேல் கமாலாம்பாள் தேர் வடம் பிடித்து தேரோட்டம் நடைபெற்றது
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அருள்மிகு தியாகராஜா கோவில் நிர்வாகத்தினர் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.